Nattukkoru nalla sedhi...

Saturday, April 22, 2006

இளையராஜா இலவசம்!

இன்றைக்கு இளையராஜாவின் 'ஒன் மேன் ஷோ' என்ற இசைக்கச்சேரி நடைபெற உள்ளது, ராயப்பேட்டை வெஸ்லி கிரவுண்டில். ஒரு நூறு ரூபாய் டிக்கெட் வாங்கி வைத்துள்ளேன். இளையராஜா லைவ்வாக கேட்கப்போகிறேன் என்று நினைக்கும்போதே சிலிர்க்கிறது.
ராஜாவின் திரை இசையை தாலாட்டு கேட்டு வளர்ந்தவர்கள் நாம். கர்நாடக சங்கீதம் படித்தவர்கள் நிறையப்பேர் 'ராஜா ஒன்றும் கர்நாடக இசை மேதைகளைப்போல் பிரமாதமான இசைக்காவியங்களைத் தந்துவிடவில்லை' என்று சொல்லக்கேட்டிருக்கிறேன். உண்மையாக இருக்கலாம். (நமக்கும் கர்நாடக இசை புரியாதுங்கோவ்.) ஆனால் சராசரித் தமிழனைப் போய்ச்சேரும் திரை இசையில் ஒரு பொற்காலம் ராஜா.
சரி. இந்த ப்ளாக்கின் நோக்கம் ராஜாவுக்கு புகழாரம் சூட்டுவதோ, இளையராஜா சிறந்தவரா என்று வாதம் செய்வதோ அல்ல.
பாமரனுக்கும் இசை போய்ச்சேரச் செய்த இளையராஜா இசைக்கச்சேரியைக் கேட்க நான், 100, 200, 500, 1000, 2000 ரூபாய் டிக்கட் வாங்குமளவு பணக்காரனாகத்தான் இருக்கவேண்டுமா? எத்தனை சராசரித் தொழிலாளர்கள், வேலையில்லாதவர்கள், சிறு வேலைகளில் இருப்பவர்கள் 100 ரூபாய் கச்சேரிக்கு செலவு செய்ய இயலும்.
இந்த எண்ணத்தின் விஸ்தரிப்புதான் 'இளையராஜா இலவசம்' கச்சேரி யோசனை. இளையராஜா ஏன் ஒரு இலவச கச்சேரி நடத்தக்கூடாது? அப்படி நடத்தினால் வரும் மக்களின் எண்ணிக்கையை நினைக்கும்போது, கோக், பெப்சி போன்ற கம்பனிகள் அதை ஸ்பான்சர் செய்தால் வரும் தொகை ஏற்பாடுகளுக்கு ஆகும் செலவுகள் தாராளமாக போதும்.
கருத்துகள்? அல்லது கைகோர்க்க விரும்புபவர்கள்?

5 Comments:

At 8:11 PM, Blogger Bharaniru_balraj said...

good idea. Ilaiyaraja will accept, but the sponcers ?

 
At 9:01 PM, Blogger paarvai said...

ஒங்க யோசனையை, அப்பாவோ,அம்மாவோ தேர்தல் இலவசமாக அறிவிக்கப் போறாங்கய்யா?? யோகன்
பாரிஸ்

 
At 12:05 AM, Blogger ♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

நான் பிரமித்து,பெருமை பட்டுக்கொள்ளும் மனிதர்களில் ராசாவும் ஒருவர்...
ஆனால் அவர் மீதான என் கர்வம் கரந்து போய்விடக்காரணமே அவர் தான்... திருவண்ணாமைலை,ஸ்ரீரங்கம் போன்ற கோவில்களுக்கு அள்ளிக்கொடுத்தது... நம்மைப் போன்றவர்களின் பணம் தான். அவர் தமிழ்சமூகத்திற்கு எப்ப செய்து விட்டார்.. இனி செய்வதற்கு... நம்மவர்கள் எப்போதுமே ஏமாளிகள் தான்.

 
At 11:37 AM, Blogger naagareega komali said...

நிகழ்ச்சிக்கு செல்லக் கொடுத்துவைக்கவில்லை. சென்று வந்த ஒருவரின் இடுகை இங்கே:
Illayaraja - One Man show.நன்றி விக்னேஷ்

 
At 11:37 AM, Blogger naagareega komali said...

நிகழ்ச்சிக்கு செல்லக் கொடுத்துவைக்கவில்லை. சென்று வந்த ஒருவரின் இடுகை இங்கே:
Illayaraja - One Man show.நன்றி விக்னேஷ்

 

Post a Comment

<< Home