Nattukkoru nalla sedhi...

Tuesday, April 04, 2006

கடமை... கட்டுப்பாடு...

தேர்ந்த அரசியல் பார்வையாளனாக இல்லாவிட்டாலும் வைகோவின் பேச்சுக்களை நிறைய முறை கேட்டிருக்கிறேன். ப.சிதம்பரம் வரிசையில், உருப்படியான, நிலையான சிந்தனை உள்ள, பண்பட்ட sensible அரசியல்வாதி என்று மனதுக்குள் பாராட்டியிருக்கிறேன்.
டிவியில் சேனல் உலாவும்போது ஜெயா டிவியில் வைகோவின் 'இரும்புத்திரை ரகசியங்கள்' பார்க்க நேரிட்டது. கருணாநிதி, தயாநிதி மாறன் இவர்களைச் சரமாரியாக அவன் - இவன் என்ற ரீதியில் சாடிக்கொண்டிருந்தார். அவர் சொன்னது உண்மையா பொய்யா என்பதல்ல எனது வாதம். வெற்றிக் கூட்டணியில் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் அவர் இவ்வளவு desperation காண்பிக்க வேண்டியதில்லை. ஓரளவு கண்ணியமாக பேசியிருந்தால் நாள பின்ன (அந்தம்மா வேலை முடிந்து கழட்டி விட்டதும்) வீதியில் கவுரதையோடு நடமாட ஏதுவாக இருக்கும். அதற்காக இப்படியெல்லாம் பேசியவர் பின்னாளில் திமுகவில் சேருவது சாத்தியமில்லை என்றும் சொல்லமுடியாது. அரசியல்வாதி நாக்குக்குத்தான் நரம்பில்லையே.
சரி, இவர் கூறியிருப்பது போல் அட்டூழியங்களையே தயாநிதி, கருணாநிதி செய்திருந்தாலும், இடித்துரைக்கும் கேளிர் என்ற முறையில், அவற்றை ஏன் முன்னரே எடுத்துக் கேட்கவில்லை? தடுத்து நிறுத்தவில்லை? எது எப்படியோ, தலைவர்கள் என்ற லெவலில் இருந்து சில படிகள் கீழிறங்கி ஏவி விடப்பட்டு மேடையில் ஏகவசனத்தில் ஏசும்/பேசும் அடுத்த லெவல் அரசியல்வாதியாகிவிட்டார் வைகோ. அண்ணா சொன்ன கண்ணியத்தை காற்றிலே பறக்கவிடாமல் அரசியல் வாதிகளே கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம்.

4 Comments:

At 6:21 AM, Blogger வரவனையான் said...

ஆகச்சரியான கருத்து, பாராட்டுக்கள்

 
At 7:20 AM, Blogger SK said...

25 சீட்டு கூட தர மறுத்து, பா.ம.க. வுக்கு முக்கியத்துவம் கொடுத்து, கூடவே வளர்ந்த உங்களைத் தள்ளி வைக்கும் நிலையை எண்ணிப் பாருங்கள்..... உங்களுக்கும் இந்தக் கோபத்தின் காரணம் புரியும்.

அரசியல்.... அதுவும் தமிழக அரசியல் என்று வந்த பின்னர், கடமையாவது, கட்டுப்பாடாவது!

கலைஞர் சொன்ன குட்டிக்கதை ஆபாசத்தை விடவா?

மக்கள் இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்த அவலங்களை சகித்துக் கொள்ள வேண்டுமோ?!

 
At 7:58 AM, Blogger சதயம் said...

நீங்கள் குறிப்பிடும் இந்த நிகழ்வை சற்றுமுன் 'ஜெயா' தொலைக்காட்சியில் கண்டேன்....

இன்று இத்தனை கொதிப்போடு புனிதரைப் போல குமுறும் வைக்கோ ஒரு மாதத்திற்கு முன் எதை 'சிரைத்துக்'கொண்டிருந்தார்.

தயாநிதி மாறனும், சன் டீவியும்தான் தமிழகத்தைப் பிடித்த சனியன்கள் மாதிரியும் அவர்களை அழித்துவிட்டால் தமிழகம் தங்கத் தலைவியின் தலைமையில் தழைத்தோங்கும் என்கிற ரீதியில் பேச அ.தி.மு.க வில் 1008 பேச்சாளர்கள் இருக்கிறார்களே,இவர் எதற்கு?.

எந்தக் கூலிக்காய் இத்தனை மாரடிக்கிறார் வைக்கோ?...

 
At 11:07 AM, Blogger naagareega komali said...

//தயாநிதி மாறனும், சன் டீவியும்தான் தமிழகத்தைப் பிடித்த சனியன்கள்
மாதிரியும் அவர்களை அழித்துவிட்டால் தமிழகம் தங்கத் தலைவியின்
தலைமையில் தழைத்தோங்கும் என்கிற ரீதியில் பேச அ.தி.மு.க வில்
1008 பேச்சாளர்கள் இருக்கிறார்களே,இவர் எதற்கு?.//
இருக்கிறார்கள். இருப்பினும் அக்கரையிலிருந்து வந்தவர் என்பதாலும் (insider info sensation!!?), இதுவரை (ஓரளவு) கண்ணியத்தோடு இருந்தவர் என்பதாலும் மற்ற ஜால்ராக்களை விட இவர் பேசுவதை
கேட்க கூட்டம் கூடுமெ என்ற ஜெ கணக்கு யாவர்க்கும் புரிந்ததே. வைகோவுக்கும் சேர்த்து.

//எந்தக் கூலிக்காய் இத்தனை மாரடிக்கிறார் வைக்கோ?... //
சந்தர்ப்பவசத்தால் பைரவ வேஷம் போட வேண்டியதாகிவிட்டது.
அதை நன்றாகச் செய்யத் துடிக்கிறார். என் நண்பர் ஒருவர் தமாஷுக்கு
சொல்வார், "50 ரூபா தாங்க எந்த பக்கம் வேணும்னாலும்
பேசறேன்." என்று.

 

Post a Comment

<< Home